search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை ரஞ்சி டிராபி"

    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன பிரித்வி ஷா காயத்தால் அவதிப்படுவதால் ரஞ்சி டிராபிக்கான மும்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. #PrithviShaw
    மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் பிரித்வி ஷா. தொடக்க பேட்ஸ்மேன் ஆன இவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தியதோடு தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    இந்தியாவின் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார். அப்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. வருகின்ற நவம்பர் 1-ந்தேதி ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் பிரித்வி ஷாவிற்கு இடம் கிடைக்கவில்லை. காயம் குணமடைந்து உடற்தகுதி பெற்றால் ரஞ்சி டிராபியில் விளையாடுவார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பிரித்வி ஷா ரஞ்சி டிராபியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் பிரித்வி ஷாவிற்கு இடமுண்டு. இந்நிலையில் இந்த காயம் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.



    ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), 2. தவால் குல்கர்னி (துணைக் கேப்டன்), 3. சித்தேஷ் லாட், 4. ஜெய் பிஸ்ட்டா, 5. சுர்ய குமார் யாதவ், 6. குமார் யாதவ், 7. அஷாய் சர்தேசாய், 8. ஆதித்யா டரே, 9. ஏக்நாத் கெர்கார், 10. ஷவம் டுபே, 11. ஆகாஷ் பர்கர், 12. கர்ஷ் கோதாரி, 13. ஷாம்ஸ் முலானி, 14. அகில் ஹெர்வாத்கர், 15. துஷ்கர் தேஸ்பாண்டே, 16. ராய்ஸ்டன் தியாஸ்.
    ×